Oviya
அரசியல் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு ஓவியா பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக உச்சம் தொட்டவர் ஓவியா.

இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர்கள் அரசியல் சாராத நடிகர், நடிகைகளிடம் அரசியல் சம்மந்தமான கேள்விகளை தவிர்க்க வேண்டும்.

அரசியல் சார்ந்த கேள்விகளை மக்களிடம் கேட்டால் வித்தியாசமான பதில்கள் கிடைக்கும் என ட்வீட் செய்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் அப்போ நீங்க ஒரு புது கட்சி தொடங்குங்க என கூற அதற்கு எனக்கு தான் என் ஆர்மி இருக்கே என பதில் கூறியுள்ளார்.

ரசிகர்களை மறந்திடாத ஓவியாவால் அவரது ஆர்மியினர் குஷியாகியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.