பீஸ்ட் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் பிரம்மாண்ட விலைக்கு விற்பனையாகி உள்ளது.

Overseas Rights of Beast Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அடுத்ததாக இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இவை அனைத்தும் முடிவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி இந்த வாரம் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தற்போது படத்தின் ஓவர்சீஸ் திரையரங்க உரிமை ரூபாய் 38 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் படங்களுக்கு பிறகு விஜயின் பீஸ்ட் திரைப்படம் மிகப் பெரிய விலைக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த படம் ஏப்ரல் 13-ஆம் தேதி அல்லது 14 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் கசிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.