Overseas Collection of Annaththe Movie

அண்ணாத்த திரைப்படத்தின் வெளிநாட்டு வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.

Overseas Collection of Annaththe Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களுடன் சுமாரான வரவேற்பை பெற்ற திரைப்படம் அண்ணாத்த. கிராமபுரங்களில் மட்டும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ரூபாய் 150 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் தமிழகத்தில் 94 கோடி தான் எனவும் இன்னொரு பக்கம் பேசப்பட்டு வருகிறது.

சபரிமலையில், வெடி வழிபாட்டுக்கு அனுமதி

ஓவர்சீஸ் நாடுகளில் படத்தை பார்க்க 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து அதன் காரணமாக அங்கும் அண்ணாத்த படத்தின் வசூல் சறுக்கியுள்ளது. பொதுவாக ரஜினியின் படம் வெளிநாடுகளில் 60 கோடியை வசூல் செய்யுமாம்.

ஆனால் இந்த முறை அண்ணாத்த திரைப்படம் ஓவர்சீஸ் நாடுகளில் மொத்தமாக சேர்த்து ரூபாய் 45 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.

மன்னிப்பு கேட்ட SS.Rajamouli | #RRR Soul Anthem #Uyire | SS Rajamouli Speech about Uyire Song Launch