வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்பது குறித்து தெரியவந்துள்ளது. 

Latest Collection Report of Viduthalai Movie : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் நடிகர் சூரி நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் விடுதலை.

இந்த படத்தில் விஜய், சேதுபதி பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது வரை படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு ரசிகர்கள் ஆவலோடு வந்து கொண்டிருப்பதால் இதுவரை இந்த படம் 38 கோடி வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

காமெடி நடிகராக வலம் வந்த சூரி நாயகனாக நடித்த முதல் படமே வசூல் வேட்டையாடி வருவது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.