Overall Collection Report of Vaali Movie
Overall Collection Report of Vaali Movie

3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான வாலி படத்தின் மொத்த வசூல் என்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க .

Overall Collection Report of Vaali Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் வாலி.

இந்த படத்தில் ஜோதிகா, சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தல அஜித் ஹீரோ வில்லனாகவும், அண்ணன் தம்பியாகவும் இரண்டு வேடத்தில் நடித்திருந்தார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான இப்படம் வெறும் ரூபாய் 3 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது.

இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 17.65 கோடி வசூல் செய்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் இரண்டு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

2019-ன் தமிழ் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? முதலிடம் யாருக்கு? – இதோ லிஸ்ட்

சென்னையில் அஜித் படம் 2 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது இதுவே முதல் முறை. கேரளாவில் 30 லட்சமும் கர்நாடகாவில் 20 லட்சமும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் ரூபாய் 10 லட்சமும் வசூல் செய்துள்ளது.

ஓவர்சீஸ் நாடுகளில் இப்படம் ரூபாய் 2 கோடி வரை வசூல் செய்துள்ளது. இவ்வாறாக உலகம் முழுவதும் மொத்தம் 20 கோடி வரை வசூல் செய்து மாபெரும் பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது.

இன்று வரை வாலி திரைப்படம் ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களின் பேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்று.