வெறும் ரூபாய் ஏழு கோடி பட்ஜெட்டில் உருவான விஜயின் கில்லி படத்தின் மொத்த வசூல் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Overall Collection of Ghilli Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இதுவரை 60க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அதிலும் குறிப்பாக சில திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படும் படங்களாக இருந்து வருகின்றன. அப்படியான படங்களில் ஒன்று தான் கில்லி.

இயக்குனர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

தென்னிந்திய சினிமாவின் வசூல் வேட்டையாடிய டாப் 10 படங்கள், முதலிடத்தில் யார்? எவ்வளவு வசூல் தெரியுமா? அதிரவைக்கும் லிஸ்ட்!

இந்த படம் வெறும் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூபாய் 29.5 கோடி வசூல் செய்துள்ளது. கேரளாவில் 4 கோடி ரூபாயில் கர்நாடகாவில் 1.2 கோடி ரூபாயும் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் அனைத்தையும் சேர்த்து 30 லட்சம் ரூபாயும் வசூல் செய்துள்ளது.

ஓவர்சீஸ் நாடுகள் மூலமாக ரூபாய் 5.50 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலமாக உலகம் முழுவதும் சேர்த்து மொத்தம் ரூபாய் 41 கோடி ரூபாய் வசூல் செய்து all-time பிளாக்பஸ்டர் படமாக சாதனை படைத்துள்ளது.

அதேபோல் சென்னையில் மட்டும் ரூபாய் 3.8 கோடி வசூல் செய்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி முதல் முறையாக ரூபாய் 30 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படமாக கில்லி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.