Ovarian Cyst :
இன்று பெண்களை பாதிக்கும் நோயாக பெரிதளவில் கருதப்படுவது இந்த கர்ப்பப் பை நீர்க்கட்டி. இதை பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் என்று கூறுவார்கள்.
அறிகுறிகள்:
உடல் எடை அதிகரிப்பு
தூக்கமின்மை, குழப்பமான மனநிலை, மன அழுத்தம்
முகப்பரு, முகத்தில் ரோம வளர்ச்சி ,சருமத்தில் மருக்கள் உருவாதல்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் :
1. காபி, டீயை குடிப்பதை குறைக்கலாம்.
2. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
3. பீட்சா ,பர்கர் போன்ற பாஸ்ட் புட் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
4. ஜங்க் ஃபுட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
5. சர்க்கரை சேர்த்த பண்டங்களை தவிர்த்தல் நல்லது.
6. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
7. வறுத்த உணவுகளையும் ,திண்பண்டங்களையும் தவிர்த்தல் வேண்டும்.
எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் :
1. கீரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
2. பூண்டு ,எள்ளு, கருப்புத் தோலுடைய உளுந்து, சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
3. வெந்தயம் ,சிறியவெங்காயம் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4. புதினா டீ அருந்தலாம்.
5. அசோகப் பட்டை தூளை சுடு நீரில் கலந்து குடிக்கலாம்.
6. செக்கில் ஆட்டிய வேர்கடலை எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
7. யோகா அல்லது தியானம் மேற்கொள்வது சிறப்பு.
8. தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
9. கலச்சிக் காய் எடுத்துக்கொள்ளலாம்