விளம்பரத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதா வாரிசு பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்பது குறித்து ஓட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் ஷ்யாம், யோகி பாபு என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் நடிகைகளில் ஜெயசுதா விஜய்க்கு அம்மாவாக நடிக்க குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்தநாள் விருந்தாக வெளியாகியிருந்த நிலையில் இது ஓட்டோ நிறுவனத்தின் விளம்பரத்தில் துல்கர் சல்மான் கொடுத்த போஸ் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இதுகுறித்த போட்டோ ஒன்றும் வைரல் ஆன நிலையில் ஓட்டு நிறுவனம் இப்படி ஒரு விளம்பரத்தை நாங்கள் எடுக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்த ஓட்டோ நிறுவனத்தின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/p/CfHDA5Ejx9k/?igshid=YmMyMTA2M2Y=
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.