Oththa Seruppu Movie Review : A Different Movie in Tamil Cinema.! | Parthiban | Kollywood Cinema News | Single Slipper Movie Review
பார்த்திபனின் இயக்கம், தயாரிப்பு, நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ஒத்த செருப்பு.

Oththa Seruppu Movie Review : படம் முழுவதும் பார்த்திபன் மட்டுமே பயணிக்கும் இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் பார்த்திபன். கருப்பாக அசிங்கமாக இருக்கும் இவருக்கு மிக அழகான பெண்ணுடன் திருமணம் நடக்கிறது, ஒரு மகனும் பிறக்கிறார். ஆனால் இவரின் மகன் வயிற்றில் இருக்கும் போதே வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டு விடுகிறார்.

இதனால் மருத்துவர்கள் குழந்தைக்கு ஆயுள் குறைவு தான். ஒவ்வொரு உடலுறுப்பாக பாதிக்கப்பட்டு ஒரு நாள் நுரையீரலும் பாதிக்கப்பட்டு இறந்து விடுவார் என கூறி விடுகின்றனர்.

இப்படியான ஒரு மகனுடன் வாழ்ந்து வரும் இவர் மூன்று கொலைகளை செய்து போலீசிடம் சிக்கி கொள்கிறார். ஏன் இந்த கொலைகளை செய்தார்? இதில் இருந்து எப்படி தப்பித்தார் என்பது தான் படத்தின் கதைக்களம்.

விவேகம் நஷ்டம் தான், ஆனால் அஜித் பெரிய மனுஷன் – பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக் ( வீடியோ )

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

படம் முழுவதும் பார்த்திபன் மட்டும் தான். காமெடி, காதல், அன்பு, கோவம், ஆவேசம் என அனைத்தையும் அற்புதமாக வெளிப்படுத்தி கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

தொழில்நுட்பம் :

இசை :

சந்தோஷ் நாராயணின் இசை படத்திற்கு மிக பெரிய பலம், சி சத்யாவின் பின்னணி இசை படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.

ஒளிப்பதிவு :

ராம்ஜியின் ஒளிப்பதிவு அற்புதம். ஒரே ஒரு அறை தான் படம் முழுவதும் காட்ட வேண்டும் என்றாலும் அதனை ரசிகர்களுக்கு அற்புதமாக செய்துள்ளார்.

எடிட்டிங் :

ஆர். சுதர்ஷனின் எடிட்டிங் கன கச்சிதம்.

இயக்கம் :

பார்த்திபனின் இயக்கம் தமிழ் சினிமாவை வேறொரு கோணத்தில் காட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த படகில் ஒரு புது முயற்சியை மேற்கொண்டு அதனை சாதித்தும் காட்டியுள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. பார்த்திபன் நடிப்பு
2. இசை
3. கதைக்களம்
4. பர்ஸ்ட் ஆப் ட்விஸ்ட்

தம்ப்ஸ் டவுன் :

1. ஒரு சில இடங்களில் மட்டும் கதையில் கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது.
2. சில லாஜிக்கல் தவறுகள் வெளிப்படையாக தெரிகின்றன.

YouTube video

REVIEW OVERVIEW
ஒத்த செருப்பு விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
oththa-seruppu-movie-reviewமொத்தத்தில் ஒத்த செருப்பு ஒரு தனி மனிதனின் உழைப்பு. நிச்சயம் பார்த்து பாராட்ட வேண்டிய திரைப்படம்.