பார்த்திபனினின் ஒத்த செருப்பு திரைப்படம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் ஆக உள்ளது.

Otha Seruppu Remake in English : தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் பார்த்திபன். இவரது நடிப்பு தயாரிப்பு இயக்கம் என ஒட்டுமொத்த உழைப்பின் வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு.

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக்காகும் ஒத்த செருப்பு - உச்சகட்ட மகிழ்ச்சியில் பார்த்திபன்.!!

ஒரே ஆளாக படம் முழுவதும் வலம் வந்து படத்தை அனைவரும் பேசும்படியாக உருவாக்கியிருந்தார் பார்த்திபன். இந்த படம் பல்வேறு விருதுகளையும் வாங்கிக் கொடுத்து வந்த நிலையில் தற்போது அடுத்த சாதனை படைத்துள்ளது.

அதாவது ஒத்த செருப்பு திரைப்படம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி மற்றும் ஆங்கில மொழி தெரிந்த உதவியாளர்களை கொண்டு பார்த்திபன் இத்திரைப்படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.