இந்தியில் உருவாகும் ஒத்த செருப்பு படத்திற்கு டைட்டில் சொன்னவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் பார்த்திபன்.

Otha Seruppu Hindi Remake : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் இயக்குனர் பார்த்திபன். இவரது இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் ஒத்த செருப்பு.

இந்தியில் உருவாகும் ஒத்த செருப்பு.. டைட்டில் சொன்னவர்களுக்கு நன்றி சொன்ன பார்த்திபன்

இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வெற்றியைப் பெற்றது. படத்தில் பார்த்திபன் மட்டுமே ஒரே ஆளாக நடித்திருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதை அனைவரையும் கவர்ந்தது.

தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதற்காக டைட்டில்களை பரிந்துரைக்குமாறு ரசிகர்களிடம் கேட்டார் பார்த்திபன். தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பல டைட்டில்களை கூறி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் கூறிய டைட்டிலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அனைத்து டைட்டில்களும் பரிந்துரையின இருக்கும். விரைவில் தேர்வாகும் என தெரிவித்துள்ளார்.