Organic Disinfectant in Kanyakumari
Organic Disinfectant in Kanyakumari

Organic Disinfectant in Kanyakumari : இந்தியாவின் எல்லை குமரி மாவட்டத்தில் மஞ்சள் _கல் உப்பு துளசி வேம்பு கலந்து இயற்க்கை கிருமிநாசினி 10 வாகனங்களில் கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், கோவளம், மாதவபுரம், அஞ்சுகிராமம், லீபுரம் மற்றும் கடற்கரை பகுதிகளில் ஊர் ஊராக மக்கள் இந்த கொரோனா என்னும் கொடிய நோயில் இருந்து அச்சமில்லாமல் வாழ்வதற்காக கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் PT செல்வகுமார் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் PTசெல்வகுமார் பேசியாவது :

மக்கள் சுகாதாரமாக வாழ்வதற்காக எளிதாக கிடைக்கும் இந்த பொருட்களை வைத்து கிருமிநாசினி இந்தியாவின் எல்லை குமரி மாவட்டத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் தெளிக்க உள்ளோம். இது போன்ற செயல்களில் இளைஞர்கள் அதிகமாக ஈடுபட வேண்டும்.

சமூகவலைத்தளத்தில் தேவையில்லாத நடிகர் நடிகைகளை பற்றி பேசுவதை விட்டுவிட்டு சமூகம் சார்ந்த புரட்சிகரமான செயல்களில் ஈடுபட வேண்டும்.

செப்டம்பர் முதல் திறக்கப்படும் சினிமா தியேட்டர்கள்..? ஆனால் இதெல்லாம் கண்டிப்பா பின்பற்றனும் – வெளியான முக்கிய விதிமுறைகள்

தமிழகத்தில் நம் மூதாதையர்கள் கண்டுபிடித்த இந்த மூலிகைகளின் சிறப்புகள் அனைவருக்கும் தெரியும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும். இதை பயன்படுத்துவதால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் ஆகும். கெமிக்களினால் தயாரிக்கப்பட்ட பிளீச்சிங் பவுடர் பாக்டீரியாக்களை மட்டுமே கொல்லும் ஆனால் வைரஸை அழிக்காது.

மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. ஆனால் இயற்கை கிருமி நாசினி வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும். ஆகவே நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களும் தமிழக முதல்வர் அவர்களும் இந்த எளிய வைத்தியம் மூலம் எளிய மக்களை காத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் எல்லையில் தொடங்கப்பட்ட இந்த புரட்சி காஸ்மீர் வரை எதிரொலிக்க வேண்டும் கொரோனா என்பது மிக வைரஸ் நோய். இதை சாதாரணமாக எண்ணி விடாமல் இந்த அரிய பொக்கிஷத்தை அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்பதே எங்களின் இலக்கு.

இன்னும் இதை பார்த்து அரசு இந்த பணியை விரிவடைய செய்ய வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்வில் கலப்பை குமரி மாவட்ட தலைவர் சிவ பன்னீர் செல்வன், கலப்பை சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன், பேராசிரியர் LIONS. ரெங்கநாயகி, குமரி மாவட்ட இளைஞரணி தலைவர் காணிமடம் தனசேகர், கலப்பை நிர்வாகிகள் ரூபன், ஜெகதீஷ், வேல் பாக்யரா‌ஜ். பால்குளம் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.