AIADMK CM Candidate 2021
AIADMK CM Candidate 2021

ஓபிஎஸ் Vs இபிஎஸ் : அடுத்த முதல்வர் யார் என இருவருக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வரும் நிலையில் அதிமுக தொண்டர்கள் பலரும் ஒருமனதாக முதல்வர் பழனிச்சாமியை தான் கை காட்டுகின்றனர்.

OPS Vs EPS in AIADMK : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்து தமிழ்நாடு அரசும் பணியாற்றி வருகிறது.

ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து பிரிந்து தனியாக சென்று செயல்பட்டபோது அவருக்கு துணையாக யாரும் நிற்கவில்லை. இதற்கு காரணம் அவர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பதவியைப் பெற்றுத் தருவதிலும் சொத்துகளைச் சேர்ப்பதிலுமே குறியாக இருந்தார்.

கட்சியை கவனிக்க தவறிவிட்டார். அதே சமயம் கடந்த தேர்தலில் இவரின் சொந்த ஊர் பகுதியிலேயே தேர்தலுக்கான பணிகளை சரிவர கவனிக்க வில்லை. இதனால் அதிமுக தோல்வியைத்தான் தழுவியது.

மேலும் டெல்லியில் இவர் மீது அதிருப்தியில் உள்ளனர். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றதும் தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கவனித்து செயலாற்றி வருகிறார்.

டெல்லியில் முதல்வர் பழனிச்சாமியின் நெருக்கம் சிறப்பானதாக இருக்கிறது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து இணைந்து பணியாற்றி வருகிறார்.

கரெக்டா காய் நகர்த்தும் அதிமுக.. அடுத்த சிஎம் யார்? ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்ட கூட்டறிக்கை!

இதனால் அவர்களின் ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமி மீது தான் உள்ளது. அதேசமயம் நாளுக்கு நாள் எடப்பாடி பழனிச்சாமி மீது மக்களுக்கு நம்பிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதன் காரணமாக அதிமுக தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் அடுத்த முதல்வராக ஒருமனதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் காட்டுகின்றனர்.

ஓபிஎஸ் அவர்கள் தன் மகனை எம்பி ஆக்கி விட்டார், தன்னுடைய தம்பியை ஆவின் நிறுவன சேர்மன் ஆக்கிவிட்டார். உன்னுடைய சந்திக்கும் கட்சியில் ஒரு பொறுப்பை உருவாக்கிவிட்டார்.

அடுத்த தேர்தலில் தன்னுடைய இளைய மகனை எம்எல்ஏவாக நிறுத்த முயற்சி செய்து வருகிறார். இவ்வாறு முழுக்க முழுக்க தன்னுடைய குடும்பத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தி வரும் ஓபிஎஸ் அவர்கள் மீது அதிமுக தொண்டர்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.