
OPS & EPS : சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், முனுசாமி ஆகியோர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.
தினகரன் தரப்புக்கு தாவிய அதிமுக நிர்வாகிகளை திரும்ப அழைக்கும் நோக்கத்தில் இந்த அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இன்று காலை 9 மணிக்கு தான் அவசர கூட்டம் நடைபெறப் போவதே உறுதி செய்யப்பட்டது.
மேலும், கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும், தினகரன் அணியை பலவீனபடுதுவதற்காகவும், இந்த ஆலோசனை கூட்டம் நடத்தி வருவதாக தெரிகிறது.
18 எம்.எல். ஏ க்கள் தகுதி நீக்கத்திற்கு பிந்தைய நகர்வுகளை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேலும், தினகரன் அணிக்கு தாவிய அதிமுக நிர்வாகிகளை திரும்ப அழைக்கும் நோக்கில் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செலவம் ஆகியோர்களின் ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அணியில் கட்சியில் இருந்து தினகரன் கட்சிக்கு தாவிய நிர்வாகிகள் மீண்டும் அதிமுக கட்சிக்கே தாவுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.