Opportunistic politics travels fast Anbumani Ramadoss
Opportunistic politics travels fast Anbumani Ramadoss

சென்னை: சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு சாட்சியாக மகாராஷ்டிரா அரசியல் உள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் என்சிபி-காங்கிரஸ்-சிவசேனா இணைந்து இன்று புதிய அரசை அமைக்க இருந்தன. இந்நிலையில் என்சிபியின் அஜித் பவார் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாஜக- என்சிபி இணைந்து, புதிய அரசை அங்கு அமைத்துள்ளன. இந்நிலையில் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் இன்று பதவியேற்றுள்ளனர். மேலும் முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸுக்கு பலர் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் டிவிட்டரில் தெரிவித்திருப்பது: “மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைத்தது பாரதிய ஜனதா., காலை நாளிதழ் செய்திகளில் சிவசேனா ஆட்சி..

மேலும் காலை தொலைக்காட்சி செய்திகளில் பாஜக ஆட்சி.. மராட்டியத்தில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.!!! இவ்வாறு பதிவிட்டுள்ளார். முன்னதாக முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸுக்கு தமிழக துணை முதல்வர் ஓபீஎஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.