Online-Medical-Stores

Online Medical : நாடு முழுவதும் ஆன்லைனில் மருந்து பொருட்களை விற்பனை செய்யும் நடைமுறைக்கு, தடை விதித்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலகட்டத்தில், முறையான வழிகாட்டுதல் இன்றியும் மருத்துவர்கள் ஆலோசனை இன்றியும், தினமும் லட்சக்கணக்கான மருந்துகள் ஆன்லைன் மூலம் விற்கப்படுவதாகவும், டாக்டர்கள் பரிந்துரையின்றி இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதால் நோயாளிகள் பலர் பாதிக்கப்படுவதாகவும், டெல்லியை சேர்ந்த தோல் சிகிச்சை நிபுணர் ஜாகிர் அகமது என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் அவர் தனது மனுவில் , “ஆன்லைனில் விற்கப்படும் பெரும்பாலான மருந்துகள் அனுமதி பெறாதவை” எனவும் குறிப்பிட்டிருந்தார்; இந்நிலையில், இந்த மனு டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் ராஜேந்திர மேனன், வி.கே.ராவ் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது;

இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள், ராஜேந்திர மேனன், வி.கே.ராவ் பெஞ்ச் முன்னதாக மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு மற்றும் மனுதாரர் அளித்துள்ள ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்ய தடை விதிப்பதாக உத்தரவிட்டது..!

இந்த தீர்ப்பை அளித்த ஐகோர்ட் நீதிபதிகள், ‘இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது’ குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்ப்பை அடுத்து ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்யப்பட்டால், ஆன்லைன் வர்த்தகம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது…

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.