ஆன்லைனில் இலவச பரதநாட்டியம் ஒர்க் ஷாப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது சிவசக்தி நாட்டியாலயா.

Online Bharatatyam Workshop : பரதநாட்டியம் என்பது நம் நாட்டின் முக்கிய கலைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏராளமான பெண் குழந்தைகள் பரதநாட்டியத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பலருக்கும் பரதநாட்டியத்தை எங்கே எவ்வாறு கற்பது என்ற குழப்பம் இருந்து வருவது மறுக்க முடியாத ஒன்று.

தற்போது சிவசக்தி நாட்டியாலயா குழு ஆன்லைனனில் மூன்று நாட்கள் இலவச பரதநாட்டியம் ஒர்க்ஷாப் நடத்த திட்டமிட்டுள்ளது. Krishna And Rasas என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் 12 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம். இதனை திருமதி வைஷ்ணவி சுகுமார் தொகுத்து வழங்க உள்ளார்.

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் திருமதி மிருதுளா அனிஷ்

8072042455 மற்றும் 9677004431

பதிவு செய்வதற்கான வாட்ஸ் அப் எண் : 9677004431

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.