Onion Rava Dosa

தேவையான பொருட்கள்:

தோசை மாவு – 4 கப்,
மைதா மாவு – 1 கப்,
ரவை – அரை கப்,
பச்சை மிளகாய் – 4,
வெங்காயம் – 2,
எண்ணெய் – தேவையான அளவு,
இஞ்சி – சிறிதளவு,
முந்திரி பருப்பு – சிறிதளவு,
சீரகம் – சிறிதளவு,
உப்பு – சிறிதளவு.

செய்முறை:

1) முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
2) தோசை மாவுடன் மைதா மாவு மற்றும் ரவை, சீரகம், பச்சை மிளகாய்,
இஞ்சி, முந்திரி பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
3) பின்னர் அடுப்பில் தோசை கல்லில் மாவை ஊற்றி, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை தூவி
எண்ணெய் ஊற்ற வேண்டும்.
4) தோசையை திருப்பி போடாமல் வெந்ததும் எடுத்து விட வேண்டும்.
5) சுவையான ஆனியன் ரவா தோசை தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here