பீஸ்ட் படத்தின் கதை இதுதான் என தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

Oneline Story of Beast Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.

மொஹரம் பண்டிகை : ஆஷூரா நோன்பு..

படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க யோகிபபு விடிவி கணேஷ் மற்றும் செல்வராகவன் என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மூன்று முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது படத்தின் கதை என்ன என்பது குறித்து தகவல் கசிந்துள்ளது.

இந்த படத்தின் தளபதி விஜய் ராணுவத்திற்கு உதவி செய்யும் ஸ்பெஷல் ஏஜென்டாக நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. அவர் டி இதுபோன்று பிரச்சனையில் இருப்பவர்களை காப்பாற்றுவது கைவந்த கலை என்பதால் அவர் பிணைக் கைதிகளாக இருக்கும் மக்களை காப்பாற்ற களம் இறங்குகிறார். இதற்கிடையில் அவருக்கு என்னென்ன சவால்கள் வருகின்றன அவற்றை எல்லாம் தாண்டி எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் கதை என கூறப்படுகிறது.

தளபதி Vijay-ன் வில்லனை வைத்து இயக்கப்போகும் Venkat Prabhu.

இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.