அண்ணாத்த திரைப்படத்தின் கதை குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Oneline Story of Annathae : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் தர்பார் திரைப்படத்தில் அடித்ததை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையிலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

எக்காரணத்தைக் கொண்டும் ரஜினியை யாரும் தொடக்கூடாது அவரிடம் செல்லக்கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன்கள் உடன் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த பத்து நாட்களில் படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து படைக்கும் சென்னை திரும்பி விடும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

OMG இதுதான் அண்ணாத்த கதையா?? இணையத்தில் லீக் ஆன ஸ்டோரி - ரசிகர்கள் ஷாக்

இந்த நிலையில் தற்போது அந்தப் படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஒரு பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் தன்னுடைய காதலருடன் ஓடிச்சென்று திருமணம் செய்து கொள்வதால் வரும் பிரச்சினையை மையமாகக் கொண்டு தான் இந்த படம் உருவாக்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தில் ரஜினிக்கு அவருடைய தங்கையாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கும் இடையே யான சென்டிமென்ட் காட்சிகள் இது பெரிய அளவில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இமான் 5 பாடல்களை முடித்துக் கொடுத்துள்ளார். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு பாடல் காலாகாலத்துக்கும் அறியாத அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடிக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அண்ணன் தங்கை சென்டிமென்ட் காட்சிகளில் ரஜினி நடித்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் இந்த திரைப்படம் பட்டித் தொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை 2021 தீபாவளிக்கு வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது‌. ‌