One nation One Ration Card : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Tamil nadu, India

One nation One Ration Card :

புதுடெல்லி: நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்கும் வகையில், “ஒரே நாடு.. ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை அடுத்த ஓராண்டுக்குள் அமல்படுத்த உள்ளது.

மத்திய அரசு அமல்படுத்திய ஒரே நாடு – ஒரே தேர்தல், ஒரே நாடு – ஒரே கல்விக்கொள்கை என்ற திட்டங்களை அடுத்து ஒரே நாடு- ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தற்போது தீவிரம் காட்டுகிறது.

இத்திட்டத்தை அடுத்த ஓராண்டுக்குள் அமல்படுத்த மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

ரேஷன் கடைகளில் மக்கள் வாங்கும் உணவுப் பொருட்களுக்கான மானியத் தொகை ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.

உணவு மற்றும் பொது விநியோகத்துறை மூலம் ஆண்டுக்கு 612 லட்சம் டன் உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ரேஷன் பொருள் விநியோகத்தில் அரசின் மானியம் பயனாளிகளுக்கு முழுமையாக சென்று அடைவதற்காகவும், முறைகேடுகளை தடுப்பதற்காகவும் நவீன தொழில்நுட்பங்களை மத்திய, மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

பல்வேறு மாநிலங்களில் ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக தற்போது ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பெற்று வருகின்றனர்.

ஆனால், ஏழை தொழிலாளர்கள் பலர் வேலை வாய்ப்புக்காக, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.

திராவிட கட்சிகளை அழிக்கும் தேசிய கட்சி: மக்களவை சபாநாயகர் தம்பிதுரை சர்ச்சை பேச்சு!

இவ்வாறு வெளி மாநிலங்களுக்கு செல்வதால், அவர்களிடம் ரேஷன் கார்டு இருந்தும் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்கும் வகையிலும், நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் அங்குள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையிலும், மத்திய அரசு புது திட்டத்தை வகுத்து வருகிறது.

இது தொடர்பாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை ஓராண்டுக்குள் அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதை செயல்படுத்த உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் 81 கோடி மக்கள் பயன் பெறுவார்கள். இத்திட்டம் மூலம் வேலை வாய்ப்புக்காக நாடு முழுவதும் இடம் பெயர்ந்து செல்லும் மக்கள்தான் அதிகம் பயன் பெறுவார்கள். இத்திட்டம் அமலானால் அவர்கள்,

இனிமேல் நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கி கொள்ள முடியும். ஒரு ரேஷன் கடையை மட்டுமே அவர்கள் சார்ந்து இருக்க தேவையில்லை. மேலும் இத்திட்டத்தின் மூலம், முறைகேடுகளும் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.