One Day Salary of VJ Manimegalai

ஒரு எபிசோடுக்கு விஜய் டிவி மணிமேகலை வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

One Day Salary of VJ Manimegalai : தமிழ் சின்னத்திரையில் சன் மீயூசிக் தொலைக்காட்சி சேனலில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. இதனை அடுத்து இவர் விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார்.

மேலும் இந்த நிகழ்ச்சி இரண்டாவது சீசன் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மணிமேகலை தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவது மட்டுமல்லாமல் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

பவானி கூடுதுறையில் பரிகார பூஜை : பொதுமக்களுக்கு அனுமதி

பொதுவாக விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அனைவர் மத்தியிலும் உண்டு. இந்த நிலையில் மணிமேகலை ஒரு எபிசோடுக்கு ரூபாய் 60,000 வரை சம்பளம் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.

Jail Movie Release-க்கு அனுமதி – Chennai உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! | Sridharan | PT.Selvakumar

ஏற்கனவே பிஎம்டபிள்யூ கார் வாங்கிய மணிமேகலை மீண்டும் சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார். விஜய் டிவி நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருவதன் மூலம் கிடைக்கும் சம்பளம் மட்டுமல்லாமல் யூ டியூப் மூலமாக லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார். இதனால் ரசிகர்கள் நீங்க இன்னொரு கார் கூட வாங்கலாம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.