Omavalli leaf Bajji Recipe
Omavalli leaf Bajji Recipe

தேவையான பொருட்கள்:-

ஓம இலை – 2 கைப்பிடி அளவு,
கடலை மாவு – 1 கப்,
அரிசி மாவு – 1 கப்,
மைதா மாவு – 1 கப்,
மிளகாய்த்தூள் – சிறிதளவு,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
பெருங்காயத்தூள் – சிறிதளவு, சீரகப்பொடி – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

1) ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு மூன்றையும் சேர்த்து, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, சீரகப்பொடி பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

2) ஓம இலையை மாவில் தோய்த்து, கடாயில் எண்ணெய் சூடானதும் அதில் போட்டு, வெந்தவுடன் பரிமாறவும்.

3) ஆரோக்கியமான ஓம இலை பஜ்ஜி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here