P V Sindhu
விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்து எங்கிருந்தாலும் கடத்தி திருமணம் செய்வேன் என 70 வயது முதியவர் கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Old man petition to collector to marry pv sindhu – இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவகத்தில் கடந்த திங்கள் கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், மலைச்சாமி(75) என்கிற முதியவர் வித்தியாசமான கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளித்தார்.

2வது திருமணம் செய்த பிக்பாஸ் ரம்யா – வைரல் புகைப்படங்கள்

அதில் ‘கல்வி மற்றும் விளையாட்டு துறையில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. குறிப்பாக பி.வி.சிந்துவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது காதலை வளர்த்துக் கொண்டேன். அவரை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். அவர் எங்கிருந்தாலும் தூக்கிக் கொண்டு வந்து திருமணம் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த விவகாரத்தில் கலெக்டர் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்கிற ரீதியில் கோரிக்கை வைத்திருந்தார்.

அதோடு, பி.வி. சிந்துவின் புகைப்படத்தையும், தனது புகைப்படத்தையும் ஒட்டியுள்ளார். மேலும், பி.வி.சிந்து இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் அவரை கடத்தி வந்து திருமணம் செய்ய தயாராக இருக்கிறேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலைச்சாமியின் இந்த கோரிக்கை பலருக்கும் சிரிப்பை வரவழைத்துள்ளது.