சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Oh My Kadavule Telungu Remake : தமிழ் சினிமாவில் ஹாஸ்பண்ட் மாரிமுத்து இயக்கத்தின் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஓ மை கடவுளே. இந்த படத்தில் கௌரவ வேடத்தில் விஜய்சேதுபதி நடித்திருந்தார்.

இன்றைய ராசி பலன்.! (6.8.2021 : வெள்ளிக் கிழமை)

இரண்டு நண்பர்கள் திருமண வாழ்க்கைக்குள் சென்றால் அந்த திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை மிகவும் கலகலப்பாக கூறிய திரைப்படம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றது.

தற்போது இந்தத் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இதில் விஷ்வாக் சென்னும், மித்திலா பார்கரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழ் விஜய் சேதுபதி நடித்த கௌரவ வேடத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு முன்னதாக அல்லு அர்ஜுன் அனுஷ்கா நடிப்பில் வெளியான ருத்ரமா தேவி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் மிக சிறந்த திரையரங்குகளில் வெளியாகும் Soorarai Pottru – எங்கு தெரியுமா?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.