Oh My Kadavule Review
அஸ்வந்த் மாரிமுத்து எழுத்து மற்றும் இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், சாரா, வாணி போஜன், எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க விஜய் சேதுபதி, கவுதம் மேனன் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள திரைப்படம் ஓ மை கடவுளே.

Oh My Kadavule Movie Review : 

படத்தின் கதைக்களம் :

அசோக் செல்வன், ரித்திகா சிங், சாரா ஆகியோர் சிறு வயதில் இருந்தே ஒன்றாக படித்து வருபவர்கள். எதிர்பாராத சூழ்நிலையில் அசோக்கிற்கும் ரித்திகாவிற்கும் திருமணம் நடந்து விடுகிறது. இது தவறான முடிவு என அசோக் செல்வன் பீல் செய்ய இந்த திருமண வாழ்க்கையில் இருந்து தப்பிக்க அவருக்கு ஒரு வழி கிடைக்கிறது.

அந்த வழி என்ன? அதனை அவர் எப்படி பயன்படுத்துகிறார்? என்னவெல்லாம் நடக்கிறது? என்பது தான் இப்படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

அசோக் செல்வன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞராக திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ரித்திகா சிங் பாசத்தை காட்ட தெரியாத பெண்ணாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இறுதி சுற்று படத்தில் முரட்டு தனமாக நடித்த பெண்ணா? இது என வியக்க வைக்கிறார்.

சாரா இந்த படத்தின் வித்தியாசமான டிராக்கை கையாண்டு நம்மை அடிக்கடி சிரிக்க வைக்கிறார்.

வாணி போஜன் அழகான நடிப்பால் நம்மை கவருகிறார். மொத்தத்தில் ஓ மை கடவுளே அவருக்கு நல்ல அறிமுக படம்.

கடவுளாக விஜய் சேதுபதியின் கெஸ்ட் ரோலும் கவுதம் மேனனின் ரோலும் பர்பெக்ட்.

தொழில்நுட்பம் :

இசை :

லியோன் ஜேம்ஸ்-ன் பின்னணி இசை பிரமாதம். பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு :

வித்து அய்யனாவின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளது.

எடிட்டிங் :

பூபதி செல்வராஜ் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் கனகச்சிதமாக எடிட்டிங்காக இருந்திருக்கும்.

இயக்கம் :

அஸ்வந்த் மாரிமுத்து ஒரு அழகான காதல் கதையை படமாக கொடுத்துள்ளார், நடிகர்களை சிறப்பாக பயன்படுத்தி வேலை வாங்கியுள்ளார். படத்தின் நேரத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதைக்களம்
2. அனைவரின் நடிப்பு
3. இசை

தம்ப்ஸ் டவுன் :

1. ரன்னிங் டைம்
2. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்

REVIEW OVERVIEW
ஓ மை கடவுளே விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
oh-my-kadavule-movie-reviewமொத்தத்தில் ஓ மை கடவுளே காதலர் தினத்திற்கு ஏற்ற தரமான படம்.