ஓபிஎஸ் மனைவி இறுதி ஊர்வலம் : பெரியகுளத்தில், இன்று நல்லடக்கம்

Sunny Leone உடன் இணையும் Sathish & GPMuthu! - டைட்டில் உடன் வெளியான Poster | Oh My Ghost

Oh My Ghost Movie Shooting : ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் சன்னிலியோன். தற்போது அந்த மாதிரி படங்களில் நடிக்காமல் நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளில் சன்னி லியோன் நடிக்கிறார்.

மேலும் தமிழில் இவருடைய நடிப்பில் வீரமாதேவி என்ற வரலாற்று படம் ஒன்று உருவாக இருந்தது. ஆனால் தற்போது இந்த படம் சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலும் இவர் தமிழில் ஷூரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் சதீஷ் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க குக் வித் கோமாளி பிரபலமான தர்ஷா குப்தா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.