மரண மாஸாக அண்ணாத்த படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Official Trailer of Rajinikanth in Annathae Trailer : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க இமான் இசை அமைத்துள்ளார்.

விராட்கோலிக்கு, பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் பாராட்டு

போட்றா வெடிய.. அட்ரா மேளத்தை.. மரண மாஸாக வெளியான அண்ணாத்த ட்ரைலர் இதோ.!!

படத்தின் டீஸர் மற்றும் வெளியான மூன்று பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் டிரைலர் அதிரடியாக இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

எங்க அப்பா அம்மா தான் சொல்லுவாங்க! – Actress Sanchita Shetty Speech | HD

அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாரின் தங்கையாக நடித்துள்ளார். குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.