Official Release Date of Valimai

வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

Official Release Date of Valimai : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்.? : மனுத் தாக்கலில் இயக்கத்தினர் உற்சாகம்..

அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க யோகி பாபு, கார்த்திகேயா என பலர் இந்த படத்தில் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் நாளை வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது எதிர்பாராதவிதமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy 66 Director Opens Up – Latest Update..! | Vijay | Vamshi Paidi Pally | Viral | Kollywood

அதாவது வலிமை திரைப்படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே தினத்தில்தான் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படமும் வெளியாக உள்ளது. இதனால் பொங்கல் தினத்தில் வலிமை மற்றும் டீஸ்ட் என இரண்டு படங்களை நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.