Jagame Thanthiram Release

ஜகமே தந்திரம் திரைப்படம் OTT-ல் ரிலீஸா? என்பது குறித்து தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

Official Clarification About Jagame Thanthiram : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று ஜகமே தந்திரம்.

இளம் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. கேங்க்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்காக ஒட்டு மொத்த தனுஷ் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கொரானா வைரஸ் பரவல், ஊரடங்கு உத்தரவு மற்றும் தியேட்டர்கள் மூடப்பட்டதன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் விட்டது.

மேலும் இந்த படத்தை OTT வழியாக ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர்.

அது இது இல்ல யாரும் நம்பாதீங்க.. தளபதி 65 அறிவிப்பை வெளியிட்ட முருகதாஸ் – வதந்திக்கு ஃபுல் ஸ்டாப்

இந்த படம் பற்றி அவர் பதிவிட்டுள்ள பதிவில் ஜகம் தற்போது சரியில்லை. இயல்பு நிலை திரும்பி தியேட்டர்கள் திறக்கப்பட்டவுடன் இப்படம் வெளியாகும். அதுவரை பொறுமையோடு காத்திருங்கள் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.