அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி தொகுப்பாளர், காமெடி நடிகர், ஹீரோ என படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக மாவீரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் ஜூலை 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.