Thalapathy Vijay

Odiyan : கேரளாவில் விஜய் படங்களை கொண்டாடுவது ஒரு மன நோய் என்று தான் கூறுவேன் என பிரபல இயக்குனர் விமர்சனம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். உலகம் முழுவதிலும் மிக பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பவர். குறிப்பாக தமிழகத்தை போல கேரளாவில் விஜய்க்கு மவுசு அதிகம்.

இதனால் சமீபத்தில் கூட பெரும் வெள்ளம் கேரளாவை தாக்கிய போது கூட தளபதி விஜய் அதிக அளவிலான உதவி தொகையையும் நிவாரண பொருட்களையும் வழங்கி இருந்தார்.

ஆனால், தற்போது மோகன் லாலின் ஓடியன் படத்தை இயக்கிய விஏ ஷிரிக்குமார் மேனன் விஜயை விமர்சனம் செய்துள்ளார்.

நமது மலையாள படம் இவ்வளவு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பதை கொண்டாடாமல் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஆனால் இதே கேரளாவில் விஜயின் படத்தை தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். இதனை ஒரு மன நோய் என்று தான் நான் கூறுவேன் என விமர்சித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.