அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமியை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

O Paneer Selvam Wife Passes Away : தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் கட்சியாக இருந்து வருகிறது அதிமுக. எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் வளர்ச்சி அடைந்த இந்த கட்சியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் வழி நடத்தி வருகின்றனர்.

அதிமுகவில் பேரதிர்ச்சி.. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் மரணம்

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

இவரது மறைவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அதிமுக தொண்டர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் ஓபிஎஸ் மனைவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.