ENPT
நவம்பர் 19-ம் தேதி தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்துடன் மூன்று படங்கள் மோத உள்ளன.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்து இரண்டு படங்களாவது ரிலீஸாகி விடும். அஜித், விஜய், ரஜினி போன்ற மாபெரும் நடிகர்களின் படங்கள் ரிலீசானால் மட்டும் தான் மற்ற படங்களை ரிலீஸ் செய்ய தயக்கம் காட்டுவார்கள்.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி இருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா நீண்ட நாளாக கிடப்பில் இருந்து வந்த நிலையில் வரும் நவம்பர் 29-ம் தேதி அந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ள இந்த படத்துடன் மேலும் மூன்று படங்கள் மோத உள்ளன. அவை என்னென்ன என்ற விவரம் இதோ

1. மார்க்கெட் ராஜா MBBS
2. அடுத்த சாட்டை
3. அழியாத கோலங்கள் 2

இந்த நான்கு படங்களில் எந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி பெற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.