Adithya Varma
கடந்த வார போட்டியில் பிகில், கைதியை ஆதித்ய வர்மா திரைப்படம் பின்னுக்கு தள்ளியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகின்றன, அப்படியில்லை என்றாலும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீசாகி விடும்.

கடந்த தீபாவளிக்கு பிகில், கைதி என்ற இரண்டு படங்கள் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தன. அதற்கு அடுத்த வாரமும் எந்த புதிய படமும் ரிலீஸ் இல்லை என்பதால் இதே நிலை தொடர்ந்தது.

அதன் பின்னர் வெளியான படங்களும் பிகில், கைதியை பின்னுக்கு தள்ளவில்லை. இரண்டு வாரத்திற்கு முன்பு வெளியான சங்கத்தமிழன், ஆக்ஷன் ஆகிய படங்களாலும் இந்த இரண்டு படங்களை அசைக்க முடியவில்லை.

இந்நிலையில் தற்போது விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான ஆதித்ய வர்மா திரைப்படம் நல்ல வரவேற்புடன் வசூல் வேட்டையாடி வருகிறது.

இதனால் பிகில், கைதி ஆகிய படங்கள் டாப் 5 லிஸ்டில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.

டாப் 5 படங்கள் லிஸ்ட் ( நவம்பர் 22 – நவம்பர் 24 வரையிலான நிலவரம் )

1. ஆதித்ய வர்மா
2. பிரோஸின் 2
3. பிகில்
4. சங்கத்தமிழன்
5. கைதி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.