
Nov 16 Movie Release List : நவம்பர் 16-ல் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ள 4 படங்கள் போட்டி போட உள்ளன.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த வாரம் தீபாவளி அன்று தளபதி விஜயின் சர்கார், பில்லா பாண்டி, களவாணி மாப்பிள்ளை என மூன்று படங்கள் ரிலீஸாகி இருந்தன.
சர்கார் படத்தின் மீதான தாக்கம் மக்கள் மத்தியில் இன்னும் குறையாததால் இந்த வார வெள்ளிக்கிழமையில் எந்தவொரு படமும் ரிலீசாகவில்லை.
இதனையடுத்து அடுத்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது அது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த வாரம் அதாவது வரும் நவம்பர் 16-ம் தேதி தமிழ் சினிமாவில் மொத்தம் 4 படங்கள் ரிலீசாகி மோத உள்ளன. அது குறித்த தகவல் இதோ
1. காற்றின் மொழி
2. செய்
3. உத்தரவு மகா ராஜா
4. சித்திரம் பேசுதடி – 2
இந்த 4 படங்களில் ஜெயிக்க போவது எந்த படம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.