
Norvey Awards : கனா திரைப்படத்தால் சிவகார்த்திகேயனுக்கு சிறந்த தயாரிப்பாளர்க்கான விருது கிடைத்து இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியாகும் சிறந்த திரைப்படங்களுக்காக விருதுகளை நார்வேவில் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது.
அதன்படி இந்த வருடமும் அந்த விருது விழா நடைபெற உள்ளது. அதில் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல விருதுகள் அளிக்கப்பட உள்ளன.
இதில் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை சிவகார்த்திகேயன் கனா படத்திற்காக தட்டி சென்றுள்ளார். தயாரிப்பாளராக அறிமுகமான முதல் படத்திலேயே சிவாவிற்கு விருது கிடைத்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
தளபதி 63 படம் இப்படி தான் இருக்குமாம் – வெளியான அதிரடி அப்டேட்.!
அதுமட்டுமில்லாமல் சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வாகியுள்ளது. மேலும் சிறந்த இசையமைப்பாளராக பரியேறும் பெருமாள், வடசென்னை ஆகிய படங்களுக்காக சந்தோஷ் நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த நடிகராக 96 படத்திற்காக விஜய் சேதுபதியும் சிறந்த நடிகையாக த்ரிஷாவும் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனா படத்தை தொடர்ந்து சிவகாத்திகேயன் பிளாக் ஷீப் டீமை வைத்து புதிய படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.