robbery
சென்னை புறநகர் பகுதிகளில் வீடுகளில் வடமாநில கும்பல் தொடர்ச்சியா கொள்ளையடித்து வருவது அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

North Indian gang robbery in chennai outside area – சமீபகாலமாக சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், சிட்லபாக்கம், சேலையூர், சானடோரியம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட உள்ளாடை மட்டும் அணிந்து 4 வட மாநில கொள்ளையர்கள் ஒரு வீட்டின் அருகே நிற்கும் சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக, கடந்த 2 மாதங்களில் தாம்பரம் சானடோரியம் பகுதியில் சுமார் 8 க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

robbers

உங்களது பொருள் ஏதாவது தொலைந்து விட்டதா? இந்த அம்மனிடம் வேண்டுங்கள் உடனே கிடைக்கும். தெரிந்து கொள்ளலாமா?

சமீபத்தில் சானடோரியம் ஜெயா நகர் பகுதியில் வசிக்கும் ஸ்ரீதர்- லாவன்யா தம்பதியின் வீடு மற்றும், ஜெயா நகர் 3வது குறுக்கு தெருவில் வசிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தும் இந்த கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. எனவே, இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்து பணியை போலீசார் இன்னும் பலப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here