தனுஷுக்கு நன்றி தெரிவித்து நிகழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார் சகோதரி கார்த்திகா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பிலும்,இயக்கத்திலும் வெளியான படம் ராயன். இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், பிரகாஷ்ராஜ், போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் தனது சகோதரியின் கணவரை போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார் தனுஷ்.
அதற்காக கார்த்திகா தனுஷிற்கு நெகிழ்ச்சி பதிவை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், ஒரு இதய சிகிச்சை மருத்துவராக டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயாவின் திறமைகள் தெரியும்.ஆனால் அவருக்குள் ஒரு நடிகர் இருக்கிறார் என தனுஷ் எப்படி கண்டுபிடித்தார் என்பதும் தனது ஐம்பதாவது படத்தில் அவர்க்கொரு சிறிய கதாபாத்திரம் இருக்கிறது என்று கூறி நடிக்க அழைத்தபோதும் வியப்பாக இருந்தது.
எனது கணவரை ஒரு நடிகராக மாற்றியதை பார்த்து பிரமித்து விட்டேன் படத்தில் எனது கணவர் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார் என நான் நினைக்கிறேன் இப்படி ஒரு வாய்ப்பை அவருக்கு கொடுத்ததற்கு தனுஷிற்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.