NKP Release Complaint : Producers Shocking Speech.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Nerkonda Paarvai Movie
பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நேற்று மேடையில் பேசிய பேச்சு வைரலாகி வருவது மட்டுமில்லாமல் அவர் அஜித் படத்தை தான் தாக்கினார் எனவும் தகவல் வைரலாகி வருகிறது.

NKP Release Complaint : தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும் விநியோகிஸ்தராகவும் வலம் வருபவர் ரவீந்திரன். இவர் தான் யோகி பாபுவின் கூர்க்கா திரைப்படத்தையும் வாங்கி வெளியிட்டு இருந்தார்.

நேற்று இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்று இருந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தை வாங்கி வெளியிட்ட ரவீந்திரன் பேசும் போது பெரிய படம் ஒன்றை தாக்கி பேசி இருந்தார்.

காப்பான் ஓவர்சீஸ் ரைட்ஸ் இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆனதா? – மாஸ் காட்டும் சூர்யா.!

அதாவது இதுவரை நான் தயாரித்த படங்கள் அனைத்துமே தோல்வி தான். கூர்க்கா திரைப்படம் தான் எனக்கு ரூ 5 லட்சம் லாபத்தை கொடுத்துள்ளது.

மேலும் சமீபத்தில் ஒரு பெரிய அல்டிமேட் படம் வியாபாரத்திற்கு வந்து இருந்தது. அந்த படத்தை நான் வாங்க முயற்சித்தேன்.

அவர்கள் உங்களுக்கு படமில்லை என்று கூட சொல்லி இருக்கலாம். ஆனால் எனக்கு அந்த படத்தை வாங்க தகுதியில்லை என கூறி விட்டார்கள் என்று பேசியுள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.