NKP New Release Date : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja, Nerkonda Paarvai
நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி குறித்த சூப்பர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

NKP New Release Date : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து உள்ளார்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின், ரங்கராஜ் பாண்டே மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

காப்பான் படம் குறித்த தாறுமாறான அப்டேட்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார், அதன் பின்னர் படம் முன்கூட்டியே ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியானது.

இதனை உறுதி செய்யும் விதமாக போனி கபூர் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு முன் கூட்டியே வெளியாகும் என அறிவித்துள்ளார்.

இதனால் நிச்சயம் படம் ஆகஸ்ட் 1 தான் ரிலீசாகும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.