NKP Movie Secrets : Reason Behind Why Ajith Choose NKP.! | Nerkonda Paarvai | Thala Ajith | Ajith Kumar | Tamil Cinema News | Kollywood Cinema News
அஜித் தான் செய்த தவறை சரி செய்யவே நேர்கொண்ட பார்வையில் நடிக்க ஆசைப்பட்டதாக எச். வினோத் கூறியுள்ளார்.

NKP Movie Secrets :  தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தல அஜித், இவருடைய நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது, அதன் பின்னர் எச் வினோத் படத்தை பற்றி அளித்த பேட்டிகளும் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தல அஜித்தை பற்றியும் இந்த படத்தை பற்றியும் வினோத் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது அஜித் சார், ஆரம்பத்தில் காதல் என்ற பெயரில் பெண்களின் பின்னாடி நானும் சுற்றியுள்ளேன்.

வினோத்துக்கு விளையாட்டு காட்டிய அஜித் – தல 60 குறித்த பக்கா அப்டேட்.!

அந்த தவறுகளையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்று தான் இப்படியொரு படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன்.

என் ரசிகர்களும் வளர்ந்து விட்டார்கள். மீண்டும் காதல், பெண்களின் பின்னாடி சுற்றுதல் போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்.

நல்ல விசயங்களை சொல்லும் படங்களில் தான் நடிக்க வேண்டும் என நினைக்கிறன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.