NKP Maaran Review Response : Inside the Photo.! | Thala Ajith | Nerkonda Paarvai | Ajith Kumar | Kollywood Cinema News | Tamil Cinema News
ப்ளூ சட்டை மாறனின் நேர்கொண்ட பார்வை விமர்சனம் லைக்ஸ்களை விட அதிக டிஸ்லைக்குகளை வாங்கியுள்ளது.

NKP Maaran Review Response : தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு மோசமான விமர்சனங்களை மட்டுமே கொடுத்து வருபவர் ப்ளூ சட்டை மாறன்.

இவர் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கும் வழக்கம் போல மோசமான விமர்சனத்தை கொடுத்திருந்தார்.

இவரது இந்த விமர்சனம் திரையுலகில் உள்ள பிரபலங்களையும் கொந்தளிக்க வைத்திருந்தது. ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து தான் வருகின்றனர். அவ்வளவு ஏன் விஜய் ரசிகர்களுக்கு கூட இந்த விமர்சனம் அதிருப்தியை தான் ஏற்படுத்தி இருந்தது.

தற்போது யூ ட்யூபில் இவரது விமர்சனத்திற்கு லைக்ஸ்களை விட டிஸ்லைக்ஸ் தான் அதிக அளவில் கிடைத்துள்ளது.

அஜித் போட்டோவை வெளியிட்டு ஒரே வார்த்தையில் ட்வீட் போட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத் – வைரலாகும் புகைப்படம்.!

ஆம் மொத்தமாக 35,000 லைக்ஸ் தான் பெற்றுள்ளது. ஆனால் டிஸ்லைக்ஸ் 60,000க்கும் அதிகமாக பெற்றுள்ளது.

இதனால் நெட்டிசன்களும் ரசிகர்களும் இப்போவாவது புரிந்து கொள்ளுங்கள் உங்களின் விமர்சனம் முற்றிலும் தவறு என மாறனை விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் சிலர் மாறன் விமர்சனத்தில் பாசிட்டிவாக சொல்வது ஒன்றே ஒன்று தான் அது அவரின் விளம்பர விமர்சனம் தான் என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.