Nivin-Pauly

Nivin Pauli Video : மலையாள நடிகர் நிவின் பாலி பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானார். இன்னும் சொல்லப் போனால் தமிழ் ஹீரோக்களுக்கு இணையாக நிவின் பாலிக்கு அந்த படம் வெளியான சமயம் தமிழ்நாட்டில் மாஸ் உருவாகியிருந்தது.

ஆனால் தமிழில் நிவின் பாலி ஹீரோவாக நடித்த ரிச்சி படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் அவருடைய மார்கெட் இங்கு வீழ்ச்சியை கண்டது.

இந்நிலையில் மலையாளத்தில் நிவின் பாலி நடிக்கும் லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதை அறிந்தகொண்ட சில ரசிகர்கள் நிவின் பாலியை காண அந்த இடத்திற்கே படையெடுத்துள்ளனர். எனினும் ரசிகர்களுடன் பொறுமையாக செல்ஃபி எடுத்துகொண்ட நிவின் பாலி, அதன்பின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

ஒரு மலையாள நடிகருக்கு தமிழகத்தில் இப்படியொரு மவுசா என இந்த வீடியோ தற்போது மலையாள ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.