விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரித்திவிராஜ் நோ சொன்ன நிலையில் அவருக்கு பதிலாக நடிக்க போவது யாரென தெரியவந்துள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளதை தொடர்ந்து அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படம் கேங்ஸ்டர் படமாக உருவாக இருப்பதாகவும் இதில் விஜய்க்கும் வில்லனாக ஆறு நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்ளிட்டோர் வில்லன் வேடத்தில் நடிக்கின்றனர் எனவும் தகவல் பரவியது.

அதுமட்டுமல்லாமல் மலையாள நடிகர் பிருத்திவிராஜ் இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக நடிக்கப் போவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் கால் சீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.

அவருக்கு பதிலாக வேறொரு மலையாள சூப்பர் ஹிட் நடிகரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் யார் என்றால் மலையாள நடிகர்களின் முக்கிய நடிகராக வலம் வரும் நிவின் பாலி தான் என சொல்லப்படுகிறது. தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் விஜய்க்கு வில்லனாக நடிக்கப் போவதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.