Nivetha Thomas

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இந்த ரஜினிகாந்தின் மகள் நிவேதா தாமஸ் தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

Nivetha Thomas Recovered From COVID19 : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ். இவர் சின்னத்திரையிலும் பல சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு தங்கையாக ஒரு படத்தில் நடித்தார். இறுதியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழில் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்த நிவேதா தாமஸ் தெலுங்குவில் தொடர்ந்து நாயகியாக மட்டுமே நடித்து வருகிறார்.

அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி கொண்ட நேர்கொண்டபார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படியான நிலையில் இவருக்கு சமீபத்தில் கரோனா வைரஸ் தொற்று விருது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் காரணமாக கொரோனா வைரஸில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளார் நிவேதா தாமஸ். இவர் தற்போது தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதவியில் புதியதாக பிறந்தது போல உணர்வதாக தெரிவித்துள்ளார். நிவேதா தாமஸ் பூரண குணம் அடைந்து இருப்பது ரசிகர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.