Formula Race Car பயிற்சியின் முதல் நிலையை வெற்றிகரமாக முடித்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

Nivetha Pethuraj Car Race Practice : தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாகவும் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த அழகுப் பதுமையாகவும், திரையில் கலக்கி வரும் நடிகை நிவேதா பெத்துராஜ், நிஜ வாழ்கையிலும் சாகச நாயகி என நிரூபித்திருக்கிறார். “Momentum – School of Advance Racing” பள்ளியில் கலந்துகொண்டு Formula Race Car Level 1 பயிற்சியை முடித்திருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

இது குறித்து நடிகை நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியதாவது… கார்களின் மீதான காதல், பள்ளிக்கு சென்ற சிறுவயதிலேயே ஆரம்பித்துவிட்டது. நான் 8வது படித்துகொண்டிருக்கும் போது எங்கள் வீட்டின் அருகில் வசித்த எனது அத்தை ஒருவர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார்கள். அப்போதிலிருந்தே ஸ்போர்ட்ஸ் கார் மீது தீவிர ஆர்வமும், வேட்கையும் என்னுள் உருவாகிவிட்டது. என்னுள் பல வருடங்களாக நீடித்திருந்த இந்த வேட்கையில் 2015 ல் “Dodge Challenger” ஸ்போர்ட்ஸ் காரை மிக ஆசையுடன் வாங்கினேன். UAE நாட்டில் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கிய இரண்டாவது பெண் நான் தான். ஆனால் இந்த காரில் மிக வேகமாக போக்கக்கூடிய V6 Engine இருந்ததை, எனது தந்தை விரும்பவில்லை. ஆனால் நான் மிக நம்பிக்கயுடனும், உறுதியுடனும் அந்த காரை ஓட்டினேன். அது மிக அற்புத அனுபவமாக இருந்தது.

அதைத்தொடர்ந்து துபாயில், F1, மற்றும் Lexus, Rolls Royce, Chevrolet போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் Dubai Motor shows க்களில் கலந்துகொண்டு வேலை செய்தேன். இது கார்களின் மீதான எனது காதலை இன்னும் அதிகமாக்கியது. நான் சென்னை வந்த பிறகு, சென்னையில் சில Motor tracksகளை சென்று பார்வையிட்டேன். ஆனால் அப்போது ஒரு போதும், நானும் ரேஸ் டிராக்கில் கார் ஒட்டுவேன் என நினைத்து பார்க்கவில்லை. ஒரு விளம்பர நிகழ்வை ஒட்டி BMW நிறுவனம் நடத்திய, அந்த வார சிறப்பு காரை ஓட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட போது கார்களின் மீதான காதல் என்னுள் மீண்டும் துளிர்த்தது. கோயம்புத்தூரில் உள்ள Momentum – School of Advance Racing கிற்கு எனது சகோதரருடன் சென்ற போது, அவர்கள் அளிக்கும் பயிற்சியை, என்னால் முடிக்க முடியுமாா? எனும் பயம் என்னுள் உருவானது. கார்களின் மீதான காதல் மற்றும் ஆர்வத்தால் மூன்று மாதம் முன்னதாகவே பயிற்சியில் சேர்ந்தேன் ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் 8 பேர் கலந்துகொள்வார்கள் அதில் ஒரே பெண் நான் தான். Tracks ல் கலந்துகொண்ட அனுபவம் இருந்ததால் கார் ஓட்டும்போது எனக்கு நம்பிக்கை கூடியது. முடிவில் காரை ஓட்டி முடிக்கும் எனது Lap timings என்னுடன் கார் ஓட்டிய ஆண்களுக்கு இணையாக இருந்தது. இது Motorsports ஆண்களுக்கானது மட்டுமல்ல பெண்களுக்கும் தான் என்கிற மிகப்பெரிய தன்னம்பிக்கையை எனக்கு அளித்தது. நாகரீகம் இவ்வளவு முன்னேறிய காலத்திலும் பெண்களுக்கான Formula 1 மற்றும் Formula 2 championships நடத்தப்படுவதில்லை. விரைவில் பெண்களுக்கான முறையான கார் பந்தயங்கள் நடைபெறும் என நம்புகிறேன்.

நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்களிடம் Championships போட்டிகளில் கலந்து கொள்வீர்களா என வினவியபோது.. பல Championships போட்டிகளில் கலந்துகொள்ள, இப்போதே அழைப்பு வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதற்காக Track practice ல் ஈடுபட நிறைய முதலீடும் அர்ப்பணிப்பும், உழைப்பும் தேவைப்படும். திரையுலகில் நான் பிரபலமாக இருப்பதால் ஸ்பான்சர் பெறுவது மிக எளிது. மிக அதிக பணம் தேவைப்படும் போட்டி இது. ஒவ்வொரு போட்டிக்கும் 15 லட்சம் வரை பணம் தேவைப்படும். ஆதலால் நான் முழுதாக தயாரானபிறகு நான் ஆசைப்பட்டால் மட்டுமே கலந்து கொள்வேன். இப்போதைக்கு எனது முழு விருப்பமும் அடுத்தடுத்த நிலைகளில் உள்ள பயிற்சியை முடிக்க வேண்டும் என்பது தான் என்றார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.