Nithya Menon Weight Loss Photos
Nithya Menon Weight Loss Photos

நடிகை நித்யாமேனன் ஒரே அடியாக 15 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

Nithya Menon Weight Loss Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நித்யா மேனன். பல படங்களில் நடித்துள்ள இவர் இறுதியாக மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் தளபதி விஜய்க்கு ஜோடியாக மெர்சல் படத்தில் நடித்து ரசிகர்களின் அளவில்லா அன்பை பெற்றார்.

சூர்யா-கௌதம் மேனன் இடையான பிரச்சனைக்கு காரணம் என்ன? பல ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை

சாப்பாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் இருந்து வரும் நித்யா மேனன் உடல் எடை கூடி குண்டாக காணப்பட்டார். இதனால் பல படங்களில் வாய்ப்புகள் அவரின் கையை விட்டு சென்றனர்.

இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய உடல் எடையில் ஒரே அடியாக 15 கிலோ குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

அவர் அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளன.

நித்யா மேனன் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.