Nithya Menon
Nithya Menon

Nithya Menon : பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தற்போது இயக்கிவரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’.

இப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் என்பவர் திடீரென இந்த படத்தில் இருந்து விலகியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம் – பக்கா மாஸ் கூட்டணி.!

ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆரின் ஜோடியாகத்தான் ஒப்பந்தமானார் டெய்சி.

அவருக்கான மாற்றும் நடிகையை கடந்த சில நாட்களாக படக்குழு தீவிரமாக தேடி வந்தனர்.

Nithya Menon
Nithya Menon

இந்நிலையில் தற்போது அந்த ரோலில் நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இன்னொரு நாயகியாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை அலியா பட், இப்படத்தில் சீதா எனும் கேரக்டரில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

‘ஆர்ஆர்ஆர்’ எனும் தலைப்பிற்கான முழு அர்த்தம் என்னவென்பதை படக்குழு தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

அது முடிவானதும் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.