Nisha Ganesh

Nisha Ganesh : கணேஷ் வெங்கட் ராமன் வீட்டிலும் குவா குவா சத்தம் கேட்க போகிறதாம். இதனை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கணேஷ் வெங்கட் ராமன்.

இவர் சீரியல் நடிகை நிஷாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கும் பிறகும் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிஷா தற்போது கற்பமாகியுள்ளார்.

அந்த புகைப்படங்களை கணேஷ் வெங்கட் ராமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் கணேஷ் வெங்கட் ராமன், நிஷாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.